கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி: முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நம்மை விட்டு பிரிந்தார் விஜயகாந்த்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் இன்று காலை அறிக்கை வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விஜயகாந்த் மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தே.மு.தி,க தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த்தின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் விஜயகாந்த் மறைவு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், “அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 28, 2023
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும்… pic.twitter.com/ZcT7ubisc4
கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.
திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என்றும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன்.
— M.K.Stalin (@mkstalin) December 28, 2023
நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரரான நண்பர் விஜயகாந்த் அவர்கள் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான முத்திரைகளைப் பதித்த… pic.twitter.com/09qWav7Pnk
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |