இரட்டை கார் குண்டுவெடிப்பில் 100 பேர் பலி! 300 பேர் படுகாயமடைந்த கோர சம்பவம்
சோமாலியா தலைநகரில் நடந்த இரட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாகியுள்ளனர்
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த லொறி வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர்
சோமாலியாவில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஆளுமை அரசை கவிழ்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதனால் பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.
Feisal Omar/Reuters
இந்த நிலையில், தலைநகர் மொகாடிஷுவில் நேற்றைய தினம் இரண்டு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. அரசு தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த தாக்குதலில் 100 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AP Photo/Farah Abdi Warsameh
மேலும் 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலியாவில் 2017ஆம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு பிறகு நடந்த மிகக்கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP Photo/Farah Abdi Warsameh
AP Photo/Farah Abdi Warsameh