தைவானை சுற்றி வளைக்கும் சீனா: கடுமையான எச்சரிக்கை-யுடன் 3 நாள் போர் ஒத்திகை அறிவிப்பு
தைவான் ஜலசந்தியை சுற்றி மூன்று நாள் ராணுவ போர் பயிற்சியை சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்க சபாநாயகருடன் சந்திப்பு
தைவானை சீனா சொந்தம் கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சுதந்திர தீவு நாடாக அறிவித்து கொண்டுள்ள தைவான், தொடர்ந்து அமெரிக்காவுடனான நட்புறவை வளர்த்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் வலுவான ஆதரவு வேண்டி, தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்(Tsai Ing-wen) கலிபோர்னியாவில் அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி-யை(Kevin McCarthy) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Twitter
தைவானின் இந்த நடவடிக்கை சீனாவிற்கு ஆத்திரமூட்டிய நிலையில், தைவான் ஜலசந்தி பகுதியில் தற்போது பதற்றம் அதிகரித்துள்ளது.
மூன்று நாள் போர் பயிற்சி
தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்னின் அமெரிக்க பயணத்தை தொடர்ந்து, சீனா சனிக்கிழமை தைவான் ஜலசந்தியை சுற்றி மூன்று நாள் ராணுவ போர் ஒத்திகையை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் கிழக்கு கட்டளை வெளியிட்டுள்ள தகவலில், ஒருங்கிணைந்த கூர்மை படை ஏப்ரல் 8 முதல் 10ம் திகதி வரை போர் ஒத்திகையை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளது.
#BREAKING China announces that it is launching three days of military drills in the Taiwan Strait
— AFP News Agency (@AFP) April 8, 2023
The People's Liberation Army's Eastern Theatre Command says 'United Sharp Sword' would run April 8 to 10 for 'combat preparedness'. pic.twitter.com/Fa7p71O91m
மேலும், இந்த போர் பயிற்சி தைவான் பிரிவினைவாத படைகளுக்கு எதிரான "கடுமையான எச்சரிக்கை" என்றும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, 13 சீன போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை தீவை சுற்றி கண்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சீனாவின் இந்த செயல் பிராந்திய நிலைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
Reuters
இதற்கிடையில், கிழக்கு புஜியன் மாகாணத்தின் கடற்கரையில் சீனா திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை நேரடியான துப்பாக்கி சூடு பயிற்சியை மேற்கொள்ளும் என மாகாண கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது.