சூழ்ச்சியை தொடங்கிய சீனா... இனி எல்லாம் மூடி மறைக்கப்படும்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில் சீனாவில் இருந்து கொரோனா தொடர்பான முக்கிய தரவுகள் எதையும் வெளியிட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதித்தவர்கள்
சீனாவில் இந்த மாதத்தில் இருந்து பொதுமக்களை கூட்டாக கொரோனா சோதனைக்கு உட்படுவது ரத்து செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவர்கள் மட்டும் இனி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
@reuters
அத்துடன் ஊரடங்கு நடவடிக்கைகளும் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த திடீர் நடவடிக்கையானது தற்போது பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன், நாடு முழுவதும் இறப்பு விகிதமும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் சமூக ஊடக பயனர்கள் ஆயிரக்கணக்கானோர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
@reuters
எச்சரிக்கை பதிவுகள்
கொரோனா தொடர்பான எச்சரிக்கை பதிவுகள் மற்றும் தொடர்புடைய தரவுகள் என அனைத்தும் அரசாங்கத்தால் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பல காணொளிகள் சமூக ஊடகத்தில் இருந்து மாயமானதாகவும் பயனர்கள் புகார் கூறுகின்றனர்.
போலிகளை புகழ்வது மட்டும் போதுமா, உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், தற்போதை நெருக்கடியான சூழல் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை சீரழிப்பதாகவும் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
@reuters
டிசம்பர் இறுதிக்குள் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18.6 என எட்டும் என பிரித்தானிய அமைப்பு ஒன்று கணித்துள்ள நிலையில், இதைவிட பலமடங்காக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், 84 மில்லியன் மக்கள் தொகைகொண்ட மாகாணம் ஒன்றில் 64% மக்களுக்கு கொரோனா உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.