இஸ்ரேலுக்கு அந்த உரிமை உள்ளது! திடீரென நிலைப்பாட்டை மாற்றிய சீனா
இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது என சீனா கூறியுள்ளது.
ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் பலியாகியுள்ளனர். அதேபோல் இஸ்ரேலின் தாக்குதலில் 5,100 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AP
சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த வாரம் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசினார்.
அப்போது அவர், 'ஒவ்வொரு நாட்டுக்கும், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது' என கூறினார்.
மேலும், தொடர் மோதலால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
Reuters
இதன்மூலம் இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இதற்கிடையில் சீன ஜனாதிபதி ஜின் பிங் அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |