கோமாவுக்கு சென்ற மனைவி... மரணத்தின் விளிம்பிலிருந்து திருப்பி அழைத்துவந்த கணவர்
சீனாவில், கோமா நிலைக்குச் சென்ற தன் மனைவியை மரணத்தின் விளிம்பிலிருந்து திருப்பி அழைத்துவந்துள்ளார் ஒரு கணவர்.
கோமாவுக்கு சென்ற மனைவி...
2016ஆம் ஆண்டு, ஒரு நண்பரின் திருமணத்தில் யி மெய்டி (Ye Meidi) என்னும் இளம்பெண்ணை சந்தித்தார் டெங் யூகேய் ( Deng Youcai, 30).
அப்போது அரியவகை மூளைப்புற்றுநோய் ஒன்றினால் பாதீக்கப்பட்டிருந்தார் மெய்டி.
டெங் அவரிடம் தன் காதலை வெளிப்படுத்த, தன் உடல் நிலையை காரணம் காட்டி மெய்டி மறுக்க, வாழ்நாள் முழுவதும் நான் உன்னுடன் இருப்பேன் என டெங் கூற, அவரது உறுதியைக் கண்ட மெய்டி டெங்கை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார்.
2019ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள, உலகின் தலைசிறந்த சிகிச்சைகளை உனக்கு நான் அளிபேன் என தன் மனைவிக்கு வாக்களித்துள்ளார் கெங்.
2021ஆம் ஆண்டு தம்பதியருக்கு ஹான்ஹான் என்னும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால், அடுத்த ஆண்டே மெய்டியின் நிலைமை கவலைக்கிடமாகி கோமா நிலைக்கு சென்றுள்ளார். சுயநினைவிழக்கும் முன், இனியும் தன் கணவரால் தனது சிகிச்சைக்கும் செலவளிக்க முடியாது என்பதை புரிந்துகொண்ட மெய்டி, கணவரிடம் விடைபெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், டெங் விடவில்லை. உண்மையில் மெய்டி மரணமடைந்துவிடுவார் என்று எண்ணி அவரை வீட்டுக்கு அழைத்துவர, அவரது உறவினர்கள் அவருக்கு விடைகொடுக்க, மகள் தாயின் கன்னத்தில் முத்தமிட, அதை வீடியா எடுத்த டெங், வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
வீடியோ வைரலாக, டெங்குக்கு ஆதரவு பெருகியுள்ளது, கூடவே நன்கொடைகளும் வந்து குவிந்துள்ளன.
ஆக, டெங் மீண்டும் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துவர, மூன்று மாத சிகிச்சைக்குப் பின் அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. நினைவு திரும்பியதும் மெய்டி கூறிய முதல் வார்த்தை, நன்றி என்பதுதானாம்.
ஆடலும் பாடலும்
தன் வேலையை ராஜினாமா செய்த டெங், தன் முழு நேரத்தையும் மனைவியை கவனித்துக்கொள்வதிலேயே செலவிட்டுள்ளார்.
மனைவியின் உடல் நிலை முன்னேற்றத்துக்காக தினமும் பாடல் பாடி, நடனமாடி மெய்டியை அவர் உற்சாகப்படுத்த, முழுமையாக குணமடைந்த மெய்டி இன்று தன் வீட்டிலேயே ஒரு கடை வைத்து நடத்தி வருகிறார்.
அவள் எங்களைப் பிரிந்து செல்வதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறும் டெங், எங்களுக்கு சின்ன வயதுதானே என்கிறார்.
அவளால் அவளை கவனித்துக்கொள்ள முடியாவிட்டால்கூட, அவளைப் பார்த்துக்கொள்ள நானும் என் மகளும் இருக்கிறோம் என்கிறார் அந்த காதல் கணவர்.
டெங் தன் மனைவியின் சிகிச்சைக்காக செலவிட்ட தொகை, 280,000 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |