சீனாவில் கனமழை.. நிலச்சரிவில் உயிருடன் புதையுண்ட 12 பேர்
சீனாவின் தென்பகுதியில் கெய்மி புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
சீனா நாட்டையே கனமழை உலுக்கி வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹுனான் மாகாணத்தின் ஹெங்யாங் நகரில் உள்ள யூலின் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், அந்த வீட்டில் இருந்த 18 பேர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இந்த நிலச்சரிவில் பலத்த காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ள 12 பேர் உயிரிழந்தனர்.
கேமி புயல் காரணமாக சீனாவில் வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போது இந்த புயல் வலுவிழந்தாலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மலை உச்சியில் இருந்து வரும் தண்ணீரால் நிலச்சரிவு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் பல பகுதிகளில் கனமழை காரணமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஷாங்காய் நகரில் ஒரு பாரிய மரம் விழுந்தது.
இந்த சம்பவத்தில் டெலிவரி பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல இடங்களில் கால்வாய்களில் விழுந்து மின்சாரம் தாக்கி பலர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |