முதல்முறையாக புதிய ஆயுதங்களை இராணுவ அணிவகுப்பில் காட்சிப்படுத்திய சீனா
சீனா தனது பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பில் பல புதிய ஆயுதங்கள் மாற்று தொழில்நுட்ப சாதனங்களை முதல்முறையாக பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீனாவின் வெற்றியின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்கள்
LY-1 laser weapon: எதிரியின் கருவிகளில் உள்ள ஒளி உணரிகளை சேதப்படுத்தும் திறன் கொண்டது.
DF-5C அணு ஏவுகணை: 20,000 கி.மீ. தூரம் தாக்கும் திறன் கொண்டது. ஒரே ஏவுகணையில் 10 இடங்களை ஒரே நேரத்தில் தாக்கமுடியும்.
JL-1 விமானத்தில் ஏவக்கூடிய அணு ஏவுகணை: இது PLA-வின் முதல் விமான அடிப்படையிலான அணு ஆயுதமாகும்.
DF-26D: அணு மற்றும் பாரம்பரிய வெடிகுண்டுகளை எந்தக்கூடிய ஏவுகணை.
விமானங்கள்
J-20, J-20A, J-20S மற்றும் J-35A போர் விமானங்கள்: உலகில் முதல்முறையாக 5 வகையான ஸ்டெல்த் போர் விமானங்கள் ஒரே அணிவகுப்பில் பங்குபெற்றன.
J-20S: இரட்டை இருக்கை கொண்ட ஸ்டெல்த் விமானம்.
J--35: சீன கடற்படையின் முதல் ஸ்டெல்த் விமானம்.
ஏவுகணைகள்
CJ-1000, YJ-18C, YJ-21 ஏவுகணைகளுடன், புதிதாக YJ-15, YJ-17, YJ-19 மற்றும் YJ-20 ஆகிய 4 வகையான hypersonic ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பாதுகாப்பு அமைப்புகள்
HQ-20, HQ-22A, HQ-29 மற்றும் HQ-19 பாதுகாப்பு அமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
ட்ரோன்கள்
நீருக்கு அடியில் இயங்கும் ட்ரோன்கள், AI கொண்ட கண்காணிப்பு மற்றும் ஸ்டெல்த் ட்ரோன்கள் மற்றும் கப்பலில் இயங்கும் ஹெலிகாப்டர்கள் வரிசைப்படுத்தப்பட்டன.
டாங்கிகள்
மேலும், நவீன ரேடார், AR தொழில்நுடபம் மற்றும் பாதுகாப்பு லேசர் கொண்ட 99B போர் டாங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த அணிவகுப்பு சீனாவின் சக்தியை உலகிற்கு காட்டும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China military parade 2025, China laser weapon LY-1, DF-5C nuclear missile, PLA stealth fighter jets, J-20S twin-seat stealth jet, China hypersonic missiles, HQ-29 missile defense system, Type 99B battle tank, China underwater drones