இந்த இரு நாடுகளுக்கு விசா தேவை இல்லை... நிபந்தனைகளை அறிவித்த சீனா
சிங்கப்பூர் மற்றும் புருனே குடிமக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்க சீனா மீண்டும் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாதாரண கடவுச்சீட்டுகளுக்கும்
தொடர்புடைய தகவலை இரு நாடுகளின் தூதரகங்களும் உறுதி செய்துள்ளன. கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு நாடுகளுக்குமான விசாக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
@afp
சிங்கப்பூர் மற்றும் புருனே பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண கடவுச்சீட்டுகளுக்கும் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழில்முறை பயணம் மேற்கொள்ளலாம் எனவும், சுற்றுலா, உறவினர்கள் நண்பர்களை சந்திக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் சீன அரசாங்கம் விலக்கிக்கொண்டது. ஆனால் மார்ச் மாதத்தில் இருந்து தான் சுற்றுலா விசா வழங்க நடவடிக்கை முன்னெடுத்தது.
தற்போது சிங்கப்பூர் மற்றும் புருனே மக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்கவும் முடிவு செய்துள்ளது. அத்துடன், நிபந்தனைகளுடன் சீன மக்களுக்கும் விசா இல்லாத பயண அனுமதியை வழங்க சிங்கப்பூர் அரசாங்கமும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |