டிக்டாக் நேரலையில் விபரீதமான விளையாட்டு: பரிதாபமாக பறிபோன உயிர்
டிக்டாக்கில் பிரபலமான சீனாவை சேர்ந்த நபர், டிக்டாக்கில் விபரீதமான ஒரு சவாலை செய்ய முயன்று, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டிக்டாக்கில் விபரீத போட்டி
சீனாவை சேர்ந்த வாங் என்பவர் 'Brother Three Thousand' என்ற டிக்டாக் பக்கத்தின் மூலமாக பிரபலமானவர் ஆவார். இவர் டிக்டாக்கில் பல விதமான சவால்களை ஏற்று நேரலையில் செய்து காட்டி அனைவரது பாராட்டையும் பெற்று வந்தவர்.
@mirror
இவரது பக்கத்திற்கு டிக்டாக்கில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டிக்டாக் நேரலையில் ஏழு மது பாட்டில்களை தொடர்ந்து குடிப்பதாக பார்வையாளர்களுக்கு சவால் அளித்துள்ளார்.
@mirror
இதனை தொடர்ந்து, அந்த போட்டியில் அடுத்து அடுத்து ஏழு மது பாட்டில்களை அவர் குடித்து முடித்துள்ளார். பின்னர் திடீரென அவர் உயிரிழந்து கிடப்பதாக அவரது பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பரிதாபமாக உயிரிழப்பு
இதனிடையே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்பு அவரது உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் அதிகப்படியான மது அருந்தியதால் தான் உயிரிழந்திருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் தற்போது சீனாவின் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
@gettyimages
சீனாவில் பொதுவாக இது போன்ற டிக்டாக் சாவல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை மீறி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
அதிக மது அருந்தியதால் உயிரிழந்த வாங் என்ற அந்த நபருடைய ஏற்கனவே ஒரு டிக்டாக் பக்கம் இருந்திருக்கிறது. அதில் அவரை 44000 பேருக்கு மேல் பின் தொடர்ந்துள்ளனர்.
அதனை தடை செய்த நிலையில், தற்போது அவர் புதிதாக ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் நேரலைகளை செய்து வரும் போது இந்த அசாம்பாவிதம் நடைபெற்றுள்ளது.