கொலம்பியாவில் பொலிஸார் மீது வெடிகுண்டு தாக்குதல்...8 அதிகாரிகள் பலி!
கொலம்பியாவில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி.
இந்த தாக்குதலில் அதிகாரி மீது எத்தகைய குற்றமும் சூட்டப்படவில்லை.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் பொது பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியின் ஹுய்லா திணைக்களத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் பொது பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பாக கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ ட்விட்டரில் தெரிவித்துள்ள தகவலில், நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
AP
அத்துடன் எட்டு பொலிஸார் இறந்த வெடிகுண்டு தாக்குதலை நான் கடுமையாக நிராகரிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இந்த தாக்குதலானது பொலிஸ் அதிகாரிகளின் ரோந்துக்கு எதிரான தாக்குதல், மற்றும் இவற்றில் அதிகாரிகள் வெடிமருந்து மற்றும் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டது போல் தெரிகிறது என பிராந்திய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் AFP-யிடம் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் அதிகாரி மீது எத்தகைய குற்றமும் சூட்டப்படவில்லை.
கொலம்பியாவின் முதல் இடதுசாரி ஜனாதிபதியாக கடந்த மாத தொடக்கத்தில் முன்னாள் கெரில்லா குஸ்டாவோ பெட்ரோ பதவியேற்ற பிறகு, பொதுப் பாதுகாப்புப் படைகள் மீதான மிகக் கடுமையான தாக்குதல் இதுவாகும்.
கூடுதல் செய்திகளுக்கு: சுமார் 5,00,000 மக்கள் பாகிஸ்தானில் இடம்பெயர்வு: வரலாறு காணாத கனமழையால் திண்டாட்டம்!
கொலம்பியாவில் செயல்படும் கடைசி ஒழுங்கமைக்கப்பட்ட கெரில்லா குழுவாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய விடுதலை இராணுவத்துடன் (ELN) பெட்ரோ மீண்டும் உரையாடலைத் தொடங்கியுள்ளார்.