சுமார் 5,00,000 மக்கள் பாகிஸ்தானில் இடம்பெயர்வு: வரலாறு காணாத கனமழையால் திண்டாட்டம்!
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பேரழிவால் அரை மில்லியன் மக்கள் இடம்பெயர்வு.
பாகிஸ்தானில் அவசர உதவிகளை செயல்படுத்துவதற்காக $160 மில்லியன் டாலர்கள் விண்ணப்பம்.
பாகிஸ்தானில் ஜூன் நடுப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக சுமார் 5,00,000 மக்கள் இடம்பெயர்ந்து இருப்பதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜூன் நடுப்பகுதியில் பெய்த கனமழையால் பாகிஸ்தானில் வரலாறு காணாத கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
இந்த இயற்கை பேரழிவில் தோராயமாக 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் 400 பேர் குழந்தைகள் எனவும் அந்த நாட்டின் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Hard to comprehend the scale of the flood disaster in Pakistan, the 5th most populated nation in the world.
— Colin McCarthy (@US_Stormwatch) August 30, 2022
Nearly 1400 dead, 1 million houses damaged or destroyed, and 50,000,000 people displaced.
1/3 of the country is underwater.pic.twitter.com/NFd15q3g7I
மேலும் இந்த ஒட்டுமொத்த பேரழிவில் கிட்டத்தட்ட 33 மில்லியன் மக்கள் பாதிப்படைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்தநிலையில் பாகிஸ்தானில் கனமழையால் இதுவரை 5,00,000 மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து இருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், பாகிஸ்தானும் ஐக்கிய நாடுகள் சபையும் (UN) பாகிஸ்தானில் அவசர உதவிகளை செயல்படுத்துவதற்காக $160 மில்லியன் டாலர்களை விண்ணப்பித்து உள்ளது.
EPA-EFE/REHAN KHAN
கூடுதல் செய்திகளுக்கு: வருத்தமான ஆச்சரியம் ஒன்றும் இல்லை: ரஷ்ய எரிவாயு நிறுத்தம் குறித்து ஐரோப்பா கருத்து!
அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.