இரண்டு நாடுகள் என்னை வேட்டையாடுகிறது... இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் கடைசி டுவீட்: கடலில் மிதந்த சடலம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளம் கிரிப்டோ கோடீஸ்வரரின் சடலம் அவரது கடைசி சமூக ஊடக பதிவிற்கு பின்னர் கடலில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 28ம் திகதி Nikolai Mushegian என்ற கிரிப்டோ கோடீஸ்வரரின் சடலம் போர்ட்டோ ரிக்கோ கடற்கரையில் இருந்து மீட்கபட்டது. தனது கடைசி டுவிட்டர் பதிவில் அமெரிக்காவின் சி.ஐ.ஏவும் இஸ்ரேலின் மொசாதும் தம்மை வேட்டையாடி வருவதாகவும், அவர்கள் கண்டிப்பாக கொலை செய்வார்கள் எனவும் பதிவிட்டிருந்தார்.
@getty
மரணத்தில் மர்மம் இருப்பதாக நண்பர்கள்
உளவியல் பாதிப்பால் அவதிப்பட்டுவந்த Nikolai Mushegian மரணம் தொடர்பில், தங்களுக்கு சந்தேகம் ஏதும் இல்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் இதை ஏற்க மறுத்துள்ளதுடன், Nikolai Mushegian மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இறப்பதற்கு முன்னதாக, தமது முன்னாள் காதலி ஒரு உளவாளி எனவும், அவளால் நான் சிக்கவைக்கப்படலாம் எனவும், சி.ஐ.ஏ மற்றும் மொசாத் குழுவினர் தம்மை சித்திரவதை செய்து கொல்லப் போகிறார்கள் எனவும் பதிவிட்டிருந்தார்.
credit: Twenty/20
இதனிடையே, போர்ட்டோ ரிக்கோ பகுதியை சேர்ந்த கிரிப்டோ சமூகத்தினரும், Nikolai Mushegian மரணத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கடலில் சாகச விளையாட்டில் ஈடுபடும் நபர் ஒருவரே அக்டோபர் 29ம் திகதி Nikolai Mushegian சடலத்தை மீட்டுள்ளார்.
கிரிப்டோ தொழிலதிபர்
அவரது கிரிப்டோ wallet அவரிடமே இருந்துள்ளது, இதனால் அந்த wallet தொடர்பில் அவர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என இன்னொரு கிரிப்டோ தொழிலதிபர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
போர்ட்டோ ரிக்கோ பகுதியில் 6 மில்லியன் டொலர் மதிப்பிலான குடியிருப்பு ஒன்றில், Nikolai Mushegian வசித்து வந்துள்ளார்.
கிரிப்டோ வர்த்தகம் சமீப நாட்களில் சூடு பிடித்துவரும் சூழலில், Nikolai Mushegian மரணமடைந்துள்ளது, அவர் சார்ந்த சமூகத்து நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.