கிரிப்டோவால் பல கோடிகளை சம்பாதித்த நபர்... துண்டு துண்டாக வெட்டப்பட்டு சூட்கேஸில் சடலம்
கிரிப்டோ கரன்சியால் பல கோடிகளை சம்பாதித்த நபர் ஒருவரின் உடல் துண்டாக வெட்டப்பட்டு, சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சிறார்கள் குழு ஒன்றால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ வர்த்தகம்
அர்ஜென்டினா நாட்டவரான 39 வயது பெர்னாண்டோ பெரெஸ் என்ற கிரிப்டோ வர்த்தகம் செய்பவரின் சடலமே கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
Credit: Jam Pres
கடந்த ஞாயிறன்று ஓடை ஒன்றின் அருகாமையில் சிறார்கள் சிலர் கால்பந்து விளையாடி வந்த நிலையில், கைவிடப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை கண்டனர். அந்த சூட்கேஸை திறந்து பார்த்த சிறுவர்கள் பயத்தில் அலறியுள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் தான் பெர்னாண்டோ பெரெஸ் என்ற கிரிப்டோ வர்த்தகர் மாயமானதாக தகவல் வெளியானது. மட்டுமின்றி, கிரிப்டோவால் கோடிகள் சம்பாதித்த பெர்னாண்டோ, சமூக ஊடகங்களில் தமது ஆடம்பர வாழ்க்கை தொடர்பில் புகைப்படங்கள் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
Credit: Newsflash
இந்த நிலையில், ஏழு நாள் பயணமாக பார்சிலோனாவில் உள்ள தனது வீட்டில் இருந்து அர்ஜென்டினா சென்றிருந்தார். ஆனால், தமது வாடகை குடியிருப்பின் சாவியை அவர் ஒப்படைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
தப்பிக்க முடியவில்லை
இதனிடையே, அந்த சிறார்கள் நடந்த சம்பவத்தை தங்கள் பெற்றோரிடம் கூற, தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவயிடத்தில் திரண்ட பொலிசார், சேறும் சகதியுமான அந்த ஓடையில் இருந்து பெர்னாண்டோவின் கை மற்றும் கால்களை மீட்டுள்ளனர்.
மட்டுமின்றி அவரது உடலில் இருந்த டாட்டூ காரணமாக, கொல்லப்பட்டுள்ளது பெர்னாண்டோ என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், மருத்துவர்கள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை போலவே, பெர்னாண்டோவின் உடல் துண்டாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
Credit: Newsflash
உடற்கூறு ஆய்வில், மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு பெர்னாண்டோ கொல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் உடல் துண்டாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், உடல் பாகங்கள் மீட்கப்படுவதற்கும் சில நாட்கள் முன்னர், சமூக ஊடகத்தில் பதிவிட்ட அவர், மோசமான நபர்களால் சூழ்ந்துள்ளது உலகம், பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |