கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை: எப்படி பயன்படுத்துவது?
மோசமான வாழ்க்கைமுறை மாற்றம், மோசமான உணவுமுறை ஆகியவை உடலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதனால், பலருக்கும் தலைமுடி ஆரோக்கியம் கூட மோசமான நிலைக்குச் சென்றுவிடுகிறது.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. வெங்காய ஜூஸ் மற்றும் கறுவேப்பிலை
- வெங்காய ஜூஸ்- ¼ கப்
- கறிவேப்பிலை- 2 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் கறிவேப்பிலையை எடுத்து அரைத்து அத்துடன் வெங்காய சாறை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதனை கலந்து தலைமுடியின் வேர்வரை தேய்த்துக்கொண்டு பின் அரைமணி நேரம் தலையில் ஊறவைக்கவும், அதன்பின் தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு மூன்று முறை இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. தயிர் மற்றும் கறிவேப்பிலை பேஸ்ட்
- தயிர்- 1 கப்
- கறிவேப்பிலை பேஸ்ட்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர் மற்றும் கறுவேப்பிலை பேஸ்ட் இரண்டையும் நன்கு கலக்கவும்.
அதன்பின் தலைமுடியின் வேர் வரை நன்கு தேய்த்து அரைமணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதன்பின் தலையை நன்கு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
3. வேப்ப எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை
- கறிவேப்பிலை- சிறிதளவு
- வேப்ப எண்ணெய்- 1 கப்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான கறிவேப்பிலையை, வேப்ப எண்ணெய் உடன் கலந்துகொண்டு நன்கு சூடு செய்யுங்கள்.
அதன்பின் அதனை வடிகட்டி சூடு தணிந்து நன்கு குளிர்ச்சி அடைந்ததும் அதன்பின் உச்சத்தலையிலும், தலைமுடி முழுவதும் தேய்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு மணிநேரம் கழித்து ஷாம்பூ கொண்டு அலசுங்கள். இது தலைமுடி வளர்ச்சிக்கு நல்ல பலனை தரும்.
4. தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை
- தேங்காய் எண்ணெய்- 1 கப்
- கறிவேப்பிலை- சிறிதளவு
பயன்படுத்தும் முறை
தேங்காய் எண்ணெய்யை நன்கு சூடுபடுத்தி அதன்பின் சுத்தமான கறிவேப்பிலையை அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கறிவேப்பிலை நன்கு சுருங்கிய பிறகு, அதனை ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளலாம்.
இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |