கட்டாய கருத்தடை... பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர்
கிரீன்லாந்தில் பல தசாப்தங்களாக நடந்த தன்னிச்சையான பிறப்பு கட்டுப்பாடு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் டென்மார்க் பிரதமர் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார்.
ஒப்புதல் இல்லாமல்
குறித்த சம்பவம் தீவுவாசிகளுக்கு ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளதுடன் டென்மார்க் உடனான உறவுகளில் விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது. 1966 மற்றும் 1991 க்கு இடையில், 12 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் கருத்தடை சாதனங்கள் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில், கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் நடந்த ஒரு விழாவில் பேசிய பிரதமர் Mette Frederiksen, இருண்ட காலத்தை மறக்கத் துணிந்தால் தவிர, நம்மில் பலர் விரும்பும் சமமான மற்றும் சரியான உறவை நாம் அடைய முடியும் என்று நான் நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருக்கடிக்கு மத்தியில், கிரீன்லாந்துடனான உறவுகளை சரிசெய்ய டென்மார்க் முன்னெடுத்துவரும் முயற்சிகளில் இந்த விழா மற்றொரு படியாக பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, கிரீன்லாந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என ட்ரம்ப் கூறி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோரிய பிரதமர்,
4,070 பெண்களுக்கு
இன்று நான் கூறும் மன்னிப்பு கடந்த காலத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றியது. நமக்கு இடையே இருக்க வேண்டிய பரஸ்பர நம்பிக்கையைப் பற்றியது என்றார்.
இந்த மாதம் நடத்தப்பட்ட விசாரணையில், 1970 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 4,070 பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன என்பது தெரியவந்தது.
ஏராளமான பெண்கள் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுவதாகவும், பலருக்கு கருத்தடை சாதனம் அகற்றப்பட்ட பிறகும் கூட குழந்தைகள் பிறக்க முடியவில்லை என்றும், பெரும்பாலும் கடுமையான தொற்றுகள் காரணமாக இது நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |