திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு Toilet Paper.., சர்ச்சையாக விமர்சித்த அண்ணாமலை
திமுகவின் தேர்தல் அறிக்கை டாய்லெட் பேப்பர் என கோயம்புத்தூர் பாஜக வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
அவர் பேசியது
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "திமுகவுக்கு தேர்தல் வந்தால் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் கூறியவற்றை நிறைவேற்றாமல் இருப்பதும், அடுத்த தேர்தல் வந்தால் அதே அறிக்கையில் சில மாற்றங்களை செய்வது வாடிக்கைதான்.
அதாவது முன்பு உள்ள தேர்தல் அறிக்கையில் சிலிண்டரின் விலையை ரூ.100 குறைக்கிறோம் என்று கூறியிருந்தால், இப்போது ரூ.500 என போடுவோம்.
அதேபோல பெட்ரோல் விலையை ரூ 5 குறைப்பதாக கூறியிருந்ததை இப்போது ரூ.30 குறைப்பதாக சொல்வார்கள். அதே போல 2026 தேர்தலில் பெட்ரோலை இலவசமாக கொடுப்போம் என்று சொல்வார்கள்.
உங்களது வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லையென்றால் திமுகவின் தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள். வீட்டில் பொட்டலம் கட்டுவதற்கு கூட பயன்படுத்துங்கள்.
நாங்கள் 2019 தேர்தலில் கொடுத்த 295 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு தேர்தலுக்கு தயாராகியுள்ளோம். அதேபோல 2024 தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு அனைத்து அமைச்சர்களும் வந்து கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்வார்கள். நான் மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன்.
தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு தேர்தல் செலவு இல்லாமல் நடத்த வேண்டும். நீங்கள் அடுத்த 40 நாட்கள் பாஜகவை கவனியுங்கள்" என்றார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |