ரஷ்யாவின் தெற்கு நகரத்தில் வெடித்த ட்ரோன்! வெளியான வீடியோ காட்சிகள்
தெற்கு ரஷ்ய நகரமான க்ராஸ்னோடரில் அதிகாலை வெடிப்புகள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய பிராந்தியங்கள் மீது தாக்குதல்
உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய பிராந்தியங்கள் மீதான தாக்குதல்கள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வருகின்றன. எனினும் ரஷ்யாவின் படைகள் எதிர்பார்க்கப்படும் உக்ரேனிய எதிர்தாக்குதலுக்கு தயாராக உள்ளன.
இந்நிலையில், க்ராஸ்னோடர் (Krasnodar) நகரத்தின் மீது பறந்த ட்ரோன், நகர மையத்தின் ஒரு தீப்பந்தத்தில் (fireball) மோதி விபத்திற்குள்ளானது. அது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை.
இரண்டு வெடிப்பு சத்தம்
க்ராஸ்னோடரில் இரண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக Baza டெலிகிராம் சேனலின் தகவலின்படி சிலர் கூறியுள்ளனர். அதிகாலை வேளையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, ரஷ்ய உளவு கப்பலான இவான் குர்ஸ் மீது உக்ரைனின் கடல்வழி ட்ரோன்கள் அத்துமீறி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
t.me/russiakuban