ரஷ்ய நகரத்தை தாக்கிய ஆளில்லா விமானம்: தொடரும் உக்ரைனின் ரகசிய ஆட்டம்
ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தை ஆளில்லா விமானம் ஒன்று தாக்கியது.
குடியிருப்பு கட்டிடத்தில் மோதிய ஆளில்லா விமானம்
ரஷ்யாவின் தெற்கு நகரமான Voronezh-ல் வெள்ளிக்கிழமை ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஆளில்லா விமானம் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்ததாக ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஒரு பெரிய எதிர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சமீபத்திய மாதங்களில் தலைநகர் மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் பல நகரங்களை ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளன.
NextaTV
கெர்சனில் ஜெலென்ஸ்கியை கொல்ல முயன்ற ரஷ்யா: வெளியான வீடியோ ஆதாரம்
ரஷ்யாவிற்குள் இறங்கி அடிக்கும் உக்ரைன்
தற்போது, சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரமான Voronezh-ல் ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. உக்ரைனுக்கு நெருக்கமாக இருக்கும் ரஷ்யா எல்லை நகரமான பெல்கோரோட்டை விட இன்னும் தூரமான பகுதியில் அமைந்துள்ள Voronezh நகரில் இது முதல் ட்ரோன் தாக்குதலாகும்.
உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில், வோரோனேஜ் மாநில பல்கலைக்கழகத்திற்கு அருகில் பெலின்ஸ்கி தெருவில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.
An explosive drone is seen crashing into a residential building in Voronezh, Russia on June 9. Three people are reported to have been injured. The drone was allegedly brought down by jamming, and may have been heading for a nearby aerodrome. pic.twitter.com/unIjroWyA6
— Euan MacDonald (@Euan_MacDonald) June 9, 2023
ரஷ்ய அரசு ஊடகம் ட்ரோன் தாக்கியதாக ஒரு கட்டிடத்தின் படங்களைக் காட்டியது, அதில் சில ஜன்னல்கள் உடைந்து காணப்பட்டன மற்றும் அதன் சுவரின் ஒரு பகுதி கருப்பாக இருந்தது.
ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவை மற்றும் அவசர சேவைகள் கட்டிடத்திற்கு அருகில் வேலை செய்வதாகவும், அவர்கள் குடியிருப்பாளர்களுக்கு உதவி செய்வதாகவும் ஆளுநர் கூறினார்.
????????Special services are considering several options for the targets of the drone that fell in Voronezh
— Theresa ?? ?? (@tretter50001) June 9, 2023
In addition to the Baltimore airfield, which is located 4.5 km from the crash site, there is an aviation enterprise 3.5 km from the house along Belinsky Street. pic.twitter.com/s8e6h5VV3H
தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்
உக்ரைனில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து பல ரஷ்ய நகரங்களைத் ட்ரோன் தாக்குதல்கள் தாக்கியுள்ளன, ஆனால் சமீபத்திய மாதங்களில் இந்த தாக்குதல் தீவிரமடைந்துள்ளன.
ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதி, இந்த மாதம் பலத்த ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது, இதனால் எல்லையோர நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மே மாத இறுதியில் இதற்கு முன்பில்லாத வகையில் ரஷ்யாவின் பல நகரங்கள் ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
NextaTV
Drone Attack, Ukraine, Russia, ukraine-Russia War