வாரத்திற்கு நான்கு நாள் வேலை... புதிய திட்டத்துடன் களமிறங்கிய மத்திய கிழக்கு நாடு
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 அரசாங்க அமைப்புகளில் முதல் முறையாக வாரத்திற்கு நான்கு நாள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
நாளுக்கு 7 மணி நேரம் வேலை
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் குறித்த திட்டம் முதல் முறையாக ஆகஸ்டு 12 முதல் செப்டம்பர் 30 வரையில் சோதனை முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது. 15 அரசாங்க அமைப்புகளில் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அறிவித்துள்ளதுடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்பதையும் அறிமுகம் செய்துள்ளனர்.
அத்துடன் நாளுக்கு 9 மணி வேலை நேரம் என்பதை 7 மணி நேரம் எனவும் குறைத்துள்ளனர். சுட்டெரிக்கும் கோடையில் இருந்து தப்பிக்க இந்த திட்டம் ஊழியர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
மேலும், 2021ல் ஐக்கிய அமீரகத்தில் இதுபோன்ற ஒரு திட்டம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளனர். வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை என்பதுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை எனவும் அறிவித்திருந்தனர்.
இதே திட்டத்தை ஷார்ஜா மாகாணத்தில் 2022ல் அறிமுகம் செய்ததுடன், வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என அறிவித்தனர். குறித்த திட்டமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து மாகாணங்களிலும் அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
வாரத்தில் நான்கு நாட்கள் வேலை
அத்துடன் GCC நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றே கூறப்படுகிறது. இதனிடையே, சவுதி அரேபியா நிறுவனம் ஒன்றும் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தை அறிமுகம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என்பது அனைத்து தொழில்களுக்கும், குறிப்பாக சுற்றுலா மற்றும் நிதிக்கு பயனளிக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
துபாய் மாகாணத்தில் இந்த திட்டம் வெற்றிபெறும் என்றால், எஞ்சிய ஐக்கிய அமீரக மாகாணங்களிலும் GCC நாடுகளிலும் அறிமுகம் செய்வதில் சிக்கல் இருக்காது என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |