நியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், பெரும்பாலும் மக்கள் வசிக்காத ஆக்லாந்து தீவுகளுக்கு அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு இன்று தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து நிலப்பரப்பில் சுனாமி எச்சரிக்கை மற்றும் சேதம் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
#BREAKING: A 6.2 magnitude earthquake has been recorded off the south-west coast of New Zealand, near the mostly uninhabited Auckland Islands.
— 9News Australia (@9NewsAUS) May 31, 2023
There is currently no tsunami threats to Australia or the New Zealand mainland. #9News pic.twitter.com/z433zkkzij