நியூசிலாந்து தாக்குதல்: இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகம் வெளியிட்டுள்ள கருத்து
நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் நிகழ்த்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், இந்த தாக்குதல் ஒரு தனி நபரால் மேற்கொள்ளப்பட்டது, அது ஒரு நம்பிக்கை சார்ந்ததோ, இனம் சார்ந்ததோ அல்லது ஒரு கலாச்சாரம் சார்ந்ததோ அல்ல என்று தெரிவித்திருந்தார்.
அவரது கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இலங்கை சமுதாயத்தை கருத்தில் கொண்டு அவர் ஒரு நல்ல தலைவராக, மரியாதையுடன் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகம், நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளது போல, இந்த தாக்குதல் ஒரு தனி நபரால் மேற்கொள்ளப்பட்டது. அது ஒரு நம்பிக்கை சார்ந்ததோ, இனம் சார்ந்ததோ அல்லது ஒரு கலாச்சாரம் சார்ந்ததோ அல்ல.
As PM Jacinda Ardern has stated, the perpetrator alone bears responsibility for these acts.
— NZ High Commission, Sri Lanka (@NZinSriLanka) September 3, 2021
The attack was carried out by an individual, not a faith, ethnicity or culture.
??’s Sri Lankan community is, and will always be, an integral and treasured part of Kiwi society.
2/2
நியூசிலாந்திலுள்ள இலங்கை சமுதாயம் எப்போதுமே நியூசிலாந்து சமுதாயத்தின் ஒரு ஒருங்கிணைந்த, முக்கிய பாகமாகத்தான் இருந்து வந்துள்ளது, இன்னமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், கொழும்புவிலுள்ள இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகம் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அறிந்து துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்த கடினமான நேரத்தில், காயமடைந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் இலங்கைக்கான நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.