ராட்சத கிரேன் விழுந்து தமிழர்கள் பலியானது மனவேதனையளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 2 தமிழர்கள் பலியானதற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கிரேன் விபத்தில் தமிழர்கள் பலி
தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில் தமிழர்கள் இருவர் உட்பட 20 பேர் பலியாகினர்.
மேலும் சிலர் காயமடைந்தனர். அத்துடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
ANI
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
இந்நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், 'மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில் 17 பேர் (20) உயிரிழந்துள்ளனர்.
அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன். அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவதுடன், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |