பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி கிடையாது: நாடொன்றின் அறிவிப்பு
ஹங்கேரி, பெண்களுக்காக வரிமான வரி தொடர்பில் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்கே இந்த சலுகைகளை வரவேற்றுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் வருமான வரி கிடையாது
ஹங்கேரி நாடு, தங்கள் நாட்டுப் பெண்களில், ஒரு குழந்தைக்கு தாயான பெண்கள், தாங்கள் 30 வயதை எட்டும் வரை வருமான வரி செலுத்தவேண்டாம் என அறிவித்துள்ளது.
இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வைத்திருக்கும் தாய்மார்களோ, தங்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்றும் ஹங்கேரி அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பிறப்பு வீதம் கணிசமாக சரிவடைந்துள்ளதையடுத்து, ஹங்கேரி தன் நாட்டுப் பெண்களுக்கு இத்தகைய சலுகைகளை அறிவித்துள்ளது.
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், தனது சமூக ஊடகமான எக்ஸில் ’Good idea’ என்று கூறி ஹங்கேரியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
Good idea https://t.co/pypG9lcXwS
— Elon Musk (@elonmusk) March 16, 2025
பிறப்பு வீதம் சரிந்து வருவது குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்துள்ள எலான் மஸ்க், அது மனித இனத்துக்கே பெரும் அபாயம் என விமர்சித்திருந்ததுடன், அரசாங்கங்கள் பிறப்பு வீதம் சரிவதைத் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |