டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பல சிக்கல்கள்! முன்னரே எச்சரித்த நபர்- பரபரப்பு தகவல் வெளியானது
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக முன்பே கூறிய நபரை, ஓஷன்கேட் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பாரிய விபத்து
டைட்டானிக் கப்பலை காண டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் சென்றவர்கள், வெடி விபத்தில் பலியானதாக செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளது தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
File
எச்சரித்த ஊழியர் பணி நீக்கம்
ஓஷன்கேட் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பும், பாதுகாப்பு அமைப்புகளும் முறையாக இல்லை என விரிவான ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆழமான கடலுக்குள் செல்லும்போது நீரின் கடுமையான எதிர்கொள்ளும் சக்தி அற்றதாக டைட்டன் இருப்பதாக அவர் எச்சரிக்கை செய்திருந்தார்.
ஆனால், குறித்த ஊழியரை ஓஷன்கேட் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொண்டதாக வழக்கு தொடர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |