முகமூடி அணிந்த மர்ம நபர்கள் யார்? ரஷ்யர்களிடம் கேளுங்கள்! எஸ்டோனியா அமைச்சர் அதிரடி
எஸ்டோனியாவால் சூழப்பட்ட பகுதியில் காணப்பட்ட ஆயுதமேந்திய நபர்களின் நோக்கத்தை இன்னும் அடையாளம் காணவில்லை என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Saatse Boot
இரண்டாம் உலகப் போரின்போது எஸ்டோனியாவை சோவியத் இணைத்துக் கொண்டதன் எச்சமான பகுதி Saatse Boot.
இது எஸ்டோனியாவின் சாலை 178 வழியாக செல்கிறது.
இது எஸ்டோனிய கிராமங்களான லுடெபா மற்றும் செஸ்னிகியை இணைகிறது. ரஷ்ய நுழைவு விசா இல்லாமலேயே இந்த சாலையில் வாகனம் ஓட்ட முடியும்.
இப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆயுதமேந்திய நபர்கள் காணப்பட்டனர். அவர்கள் ரஷ்யர்கள் என்ற கூற்று நிலவுகிறது.
இந்த நிலையில், எஸ்டோனியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் (Hanno Pevkur) ஊடகத்திடம் கூறுகையில்,
"சமீபத்தில் காணப்பட்ட ஆயுதமேந்திய ரஷ்ய ஆண்கள் குழுவின் தொடர்பு அல்லது நோக்கத்தை எஸ்டோனியா இன்னும் அடையாளம் காணவில்லை" என்றார்.
முகமூடி அணிந்த நபர்கள் யார்
மேலும், நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், "முகமூடி அணிந்த நபர்கள் யார் என்று ரஷ்யாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும். ஆனால் நேர்மையான பதிலை எதிர்பார்க்கக் கூடாது. ரஷ்யர்களிடம் கேளுங்கள்.
ரஷ்யாவுடன் தொடர்புகொள்வது என்பது அவர்கள் உண்மையை கூறுவார்கள் என்று நீங்கள் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள். அவர்கள் தங்கள் வான்வெளியில் இல்லை என்று கூறிய மிக் விமானங்களுக்கும் இதுவே நடந்தது" என்றார்.
இதற்கிடையில், ஆண்கள் காணப்பட்ட பிறகு Saatse Bootஐ வெட்டும் சாலை 178யின் பகுதியை எஸ்டோனியா மூடியபோதிலும், அச்சுறுத்தல் நிலை மாறவில்லை என்று வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா கூறியுள்ளார்.
அவரது பதிவில், "தெளிவாக சொல்ல வேண்டுமென்றால்; எல்லையில் கடுமையான எதுவும் நடக்கவில்லை. ரஷ்யர்கள் முன்பை விட சற்று அதிகமாகவும், வெளிப்படையாகவும் செயல்படுகிறார்கள். ஆனால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என எழுதினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |