உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி
ரஷ்யா ஒப்பந்தத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
புடினின் விருப்பம் என்ன?
புடின் மற்றும் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்பந்தங்களில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவ்வாறு புடின் இருந்தால் அது ஒரு கடினமான சூழ்நிலையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மோதல் நாடுகளை சேர்ந்த இரு தலைவர்களும் சரியாக செல்கிறார்கள் என்று தான் நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு
உக்ரைனின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், உக்ரைன் பாதுகாப்பை பொறுத்தவரை, ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தங்கள் படைகளை உக்ரைனில் நிலைநிறுத்த விரும்புவார்கள், இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக மாறாது என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை படைகள் நிலைநிறுத்தப்படாது என டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இருப்பினும் வான் பாதுகாப்பில் உறுதுணையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் நான் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க விரும்புவதாகவும் தன்னுடைய நோக்கத்தை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |