2027வாக்கில் புடின் ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடும்: நிபுணர்கள் எச்சரிக்கை
புடின் உக்ரைனை ஊடுருவிய உடனேயே, அவர் மற்ற ஐரோப்பிய நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஒரு கருத்து பரவலாக நிலவிவருகிறது.
இந்நிலையில், அவர் 2027இலேயே ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பொன்றின் அறிக்கை எச்சரிக்கிறது.
2027வாக்கில் புடின் ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடும்
ரஷ்யா, உக்ரைனுடனான போரில் தனது வீரர்கள் மற்றும் ஆயுதங்களை பெருமளவில் இழந்துவிட்டது.
ஆக, உக்ரைனுடன் போர் நிறுத்தம் ஏற்படும் நிலையில், அது ரஷ்யா தனது படை மற்றும் ஆயுத பலத்தை மீண்டும் அதிகரித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்கிறது International Institute of Strategic Studies (IISS) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை.
US European Command என்னும் அமைப்பின் தலைவரான General Christopher Cavoli, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவரான Kaja Kallas ஆகியோரும் இதே கருத்தை ஆமோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |