மகன் இறந்து 18 மாதங்களில் பிரபல பாடகி மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல அயர்லாந்து பாடகி சினேட் ஓ'கானர் தனது 56வது வயதில் உயிரிழந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்து பாடகி
அயர்லாந்தின் டப்ளினைச் சேர்ந்தவர் சினேட் ஓ'கானர் (56). பிரபல பாடகியாக வலம் வந்த இவர் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.
இவரது மகன் ஷான் தனது 17வது வயதில் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இது சினேட் ஓ'கானருக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சினேட் ஓ'கானர் மரணமடைந்துள்ளார். அவரது குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் அன்பான சினேட் காலமானதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
AP
ரசிகர்கள் அதிர்ச்சி
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போற்றப்படும் பாடகியாக வலம் வந்த சினேட்டின் மறைவுக்கு அஞ்சலிகள் குவிந்து வருகின்றன.
சினேட் ஓ'கானர் கிராமி உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |