ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம்: புடின் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
பொருளாதார மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய நகரம் ஒன்றிற்குச் செல்லவேண்டியிருந்ததால், அந்த நகரத்தில் மொபைல் இனைய சேவையை முழுமையாக முடக்கியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்
கடந்த மாதம் கிரெம்ளினில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தனக்குக் குறிவைக்கப்படுவதாக அச்சமடைந்துள்ளார் புடின்.
அவர், மொபைல் போன் சிக்னல் மூலம் அந்த ட்ரோன்களை வழிநடத்தமுடியும் என அஞ்சுவதாகத் தெரிகிறது.
Credit: East2West
மொத்த இணைய சேவையும் முடக்கம்
இன்று, செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்கிறார் புடின். ஆகவே, அங்கும் தன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அவர் கருதுகிறார்.
அதைத் தொடர்ந்து செயின்ட் பீற்றர்ஸ்பர்கில் மொபைல் இணைய சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
Credit: AFP
ரஷ்யாவின் தொலைக்கட்டுப்பாட்டு அமைச்சகம், இணைய சேவைகளை முடக்குமாறு அனைத்து மொபைல் ஆபரேட்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
மொபைல் போன் சிக்னல் மூலம் இயக்கப்படும் ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Credit: AFP