உக்ரைனுக்கு போர் விமானங்கள்: விஷயத்தை போட்டுடைத்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்
உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பும் யோசனையை முன்னுரிமையாக பார்க்கவில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்ததாக BFMTV செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுற்றுப் பயணத்தில் ஜெலென்ஸ்கி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், அடுத்த கட்ட தீவிர தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக அறிக்கைகளில் தொடர்ந்து எச்சரிக்கை வெளியாகி வருகிறது.
இதற்கிடையில் ரஷ்யாவுடன் தொடர்ந்து போராட போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்பு வேண்டும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்.
Wikimedia Commons
மேலும் இது தொடர்பாக முதல் முறையாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்-கை சந்தித்து போர் தொடங்கியதில் இருந்து சிறப்பான ஆதரவு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.
அத்துடன் பிரான்சுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இருந்த ஜெலென்ஸ்கி, கனரக ஆயுதங்கள் மற்றும் நவீன போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதில் தயங்காமல் இருந்தால், ரஷ்யாவுடனான உக்ரைன் போரில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி முக்கிய 'கேம் சேஞ்சர்' ஆக வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.
போர் விமானங்களை முன்னுரிமையாக பார்க்கவில்லை
இந்நிலையில் உக்ரைனுக்கான போர் விமானங்களை முன்னுரிமையாக பார்க்கவில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியதாக BFMTV செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
EPA
கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது போல சீசர் துப்பாக்கிகளை மாற்றுவது போன்ற பிற முன்னுரிமைகளை உக்ரைனுக்கு உதவ பிரான்ஸ் விரும்புவதாக செய்தியாளர்களிடம் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது எதிர்காலத்தில் போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கான சாத்தியத்தை நிராகரிக்காமல், “இது இன்றைய தேவைகளுக்கு பொருந்தாது” என்று மக்ரோன் குறிப்பிட்டு இருந்தார்.