உக்ரைனுக்கு போர் விமானங்கள்…நோட்டோ உறுப்பு நாடுகளுக்கு போலந்து முக்கிய வேண்டுகோள்
உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்புவதில் நோட்டோ உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என போலந்து பிரதமர் Mateusz Morawiecki வியாழன்று வலியுறுத்தினார்.
உக்ரைனுக்கான இராணுவ உதவி
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடக்கவுள்ள நிலையில், அடுத்த கட்ட தீவிர தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி இருப்பதாக வருவதாக அறிக்கைகளில் தொடர்ந்து எச்சரிக்கை வெளியாகி வருகிறது.
இதற்கிடையில் ரஷ்யாவுடன் தொடர்ந்து போராட போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்பு வேண்டும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
France and Germany have the opportunity to be 'game changers' in the war against Russia by not hesitating in delivering heavy weapons and modern fighter jets to Ukraine, President Volodymyr Zelenskiy said during a visit to Paris https://t.co/DvfuhYKZ42 pic.twitter.com/idqzyqpxfC
— Reuters (@Reuters) February 9, 2023
அதனடிப்படையில், பிரித்தானியா அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு புதிய போர் ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.
போலந்து வலியுறுத்தல்
இந்நிலையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்குவதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று போலந்து பிரதமர் மொராவிக்கி வியாழன்று வலியுறுத்தினார்.
EPA
அத்துடன் உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் முதல் நாடாக இருக்க மாட்டோம், ஆனால் ஜெட் விமானங்களை அதிகமாக வைத்து இருக்கும் நாடுகள் அதனை உக்ரைனுக்கு வழங்க முடியும் என்றால் நாங்கள் நேர்மறையான பதிலளிப்போம் என பிரஸ்ஸல்ஸ் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும் போலந்து பிரதமர் ரஷ்யாவுக்கு எதிரான கூடுதல் தடைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார், மற்றும் வெற்றிக்கான போராட்டத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதை ரஷ்யாவுக்கு காட்டும் மிகவும் குறிப்பிட்ட விதிகளை நாம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.