ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ! ட்ரோன் தாக்குதலுக்கு பின் நடந்த சம்பவம்
தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பிடித்துள்ளது.
எண்ணெய் ஆலைகள் குறிவைப்பு
ரஷ்யாவில் இம்மாத தொடக்கத்தில் IIsky சுத்திகரிப்பு ஆலையில் ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் தீ பற்றியது. நாடு முழுவதும் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியா, இம்மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் ட்ரோன்களால் தாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தெற்கு பகுதியான கிராஸ்னோடரில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ வெடித்துள்ளது. மற்றொரு சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே ட்ரோன் கீழே விழுந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Afipsky Refinery
தீ அணைப்பு
ட்ரோன் தாக்குதலுக்கு பின் இது நடந்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் வென்யாமின் கோண்ட்ராடியேவ் கூறும்போது உயிர் சேதம் ஏதும் இல்லை, Afipsky எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ சில மணிநேரங்கள் எரிந்த பிறகு அணைக்கப்பட்டது என்றார்.
இந்த சுத்திகரிப்பு ஆலை, இல்ஸ்கி எண்ணெய் ஆலைக்கு அருகில் அமைந்துள்ளதுடன், இம்மாதம் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இதற்கிடையில், ஆலையின் உள்கட்டமைப்பு சேதமடையவில்லை மற்றும் தீ இல்லை என்றும், கீழே விழுந்த ட்ரோன் பின்னர் வெடிகுண்டு செயலிழக்கக் குழுவால் அழிக்கப்பட்டது என்றும் செயல்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது.
Reuters