கதவு திறந்தபடி பறந்த விமானம்: பாடகர் வெளியிட்ட திக் திக் வீடியோ
நடுவானில் விமானத்தின் அவசரக் கதவு கதவு திறந்து கிடக்கும் பயங்கர வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடுவானில் திறந்த விமான கதவு
நடுவானில் விமானத்தின் அவசரகால வெளியேறும் கதவு திறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் விமானத்தில் இருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்த வீடியோ கூட ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில், பயணத்தின் நடுவே விமானத்தின் கதவு எப்படி திறந்தது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாடகர் வெளியிட்ட பயங்கர வீடியோ
இந்த வீடியோவை பிரேசில் பாடகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். பிரேசிலிய பாடகரும் பாடலாசிரியருமான Tierry பகிர்ந்துள்ள இந்த வீடியோ, விமானத்தின் கதவுகள் திறந்திருப்பதையும், பலத்த காற்று வீசுவதையும் காட்டுகிறது.
The aircraft of Brazilian singer and songwriter Tierry safely lands at São Luís Airport after the cargo door opens in flight. pic.twitter.com/VIx79ABtdX
— Breaking Aviation News & Videos (@aviationbrk) June 14, 2023
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளதால் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரேக்கிங் ஏவியேஷன் நியூஸ் இந்தக் பயங்கரமான காட்சிகளைத் தங்கள் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது. இந்த வீடியோ ஜூன் 14 அன்று பகிரப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |