உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் பறக்கும் கார் : அந்நாட்டு அரசு ஒப்புதல்!
உலகத்திலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள சாலைகளில் பறக்கும் காருக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் பறக்கப்போகும் கார்
அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடம் சட்டப்பூர்வ அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தது.
தற்போது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார், பயணிகள் போக்குவரத்திற்காக அமெரிக்க அரசிடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சான்றிதழ் பெற்ற முதல் பறக்கும் கார் இதுவாகும்.
இந்த பறக்கும் கார் மின்சாரத்தில் பறக்கக்கூடியது. இக்காரின் விலை $300,000 ஆகும். இந்த பறக்கும் காரில் 2 பயணம் செய்யலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்ட இடங்களில் நெரிசல் ஏற்பட்டாலோ இக்காரால் பறக்க முடியும்.
வரும் 2025ம் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு பறக்கும் கார்களை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இக்கார் சாதாரண சாலையில் மணிக்கு 25 மைல்களுக்கு மேல் செல்லாது. இந்த பறக்கும் கார் குறைந்த வேகம் கொண்டது.
Highways in the sky? First 'flying car' approved by the FAA #FAA #Flyingcar #Cars pic.twitter.com/l0FA7bpyOE
— NewsGPTai (@AnoopSihag20) June 29, 2023
World's First 'Flying Car' Gets Special Airworthiness Certification From FAA
— Simple Flying (@simple_flying) June 28, 2023
In the latest electrical vertical takeoff and landing (eVTOL) vehicle news, Alef Aeronautics's flying car has received legal approval to fly from the US Government. The sustainable mobility company… pic.twitter.com/LomrGzVuAS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |