அதிகரித்த விலை உயர்வு, பற்றாக்குறை: அவசர நிலை பிரகடனம் செய்த ஜனாதிபதி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உணவு பண்டங்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார் ஜனாதிபதி போலா டினுபு.
பணத்திற்காக கடத்தப்படும் குழுக்களிடம்
எரிபொருள் மானியத்தை சமீபத்தில் நீக்கியதன் மூலம் சேமிக்கப்பட்ட பணத்தை விவசாயிகளுக்கு உரம் மற்றும் தானியங்களை வழங்குவதற்காக பயன்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகிறது.
@AFP
மட்டுமின்றி, விவசயிகளுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பணத்திற்காக கடத்தப்படும் குழுக்களிடம் பல விவசாயிகள் சிக்குவதால், அதில் இருந்து தப்பிக்க பலர் தங்கள் நிலத்தை கைவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆதரவற்ற ஏழை மக்களுக்கு மாதம் 10 டொலர்கள் என 6 மாதங்களுக்கு உரிமைத்தொகை வழங்க இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் ஐநா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், இந்த ஆண்டு 25 மில்லியன் நைஜீரியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிட்டிருந்தனர்.
வாங்க முடியாமல் போகலாம்
அதாவது, ஒவ்வொரு நாளும் போதுமான சத்தான உணவை அவர்களால் வாங்க முடியாமல் போகலாம் என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த நிலையில், ஜூன் 2022 வரையிலான 12 மாதங்களில் மட்டும் 350க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி போலா டினுபு ஆட்சிக்கு வந்ததும் முதல் கொள்கை முடிவாக எரிபொருள் மானியத்தை நீக்கியதை குறிப்பிடுகின்றனர். எரிபொருள் மானியம் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்தே காணப்பட்டுள்ளது.
மானியம் நீக்கப்பட்டதும் நாட்டின் சில பகுதிகளில் 200 சதவீதம் வரையில் விலை உயர்வு காணப்பட்டதாக கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |