பாலத்திலிருந்து குதித்து பெண்ணை காப்பாற்றிய உணவு டெலிவரி ஏஜென்ட்- 35 லட்சம் பரிசு
சீனாவில் நீரில் மூழ்கும் பெண்ணை காப்பாற்ற பாலத்திலிருந்து குதித்த உணவு டெலிவரி ஏஜென்டுக்கு கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ஹீரோவாக போற்றப்படும் உணவு டெலிவரி ஏஜென்ட்
சீனாவில் உணவு டெலிவரி செய்யும் ஏஜென்டாக வேலை செய்யும் பெங் கிங்லின் (Peng Qinglin) என்ற இளைஞர், நீரில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற பாலத்திலிருந்து 12 மீட்டர் குதித்ததற்காக ஹீரோவாக போற்றப்படுகிறார்.
ஜூன் 13-ஆம் திகதி, வாடிக்கையாளருக்கு உணவை டெலிவரி செய்யும்போது கியான்டாங் ஆற்றில் பெண் போராடுவதை பெங் கிங்லின் பார்த்தபோது இந்த சம்பவம் நடந்தது.
hungarian.cri.cn
தண்ணீரில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த பெண்
31 வயதான பெங் கிங்லின் 12 மீட்டர் உயரமுள்ள பாலத்தின் தடுப்பு கம்பிகளைத் தாண்டி விளிம்பிலிருந்து தண்ணீரில் குதித்து, உயிருக்காக போராடிக்கொண்டிருந்த பெண்ணை நோக்கி நீந்திச் சென்று, அவரை அருகில் இருந்த ஏணிக்கு அழைத்துச் சென்றார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், உயிர்காக்கும் படகுகளும் 10 நிமிடங்களில் மீட்புப் பணியை முடித்தன. அந்த பெண் உயிர் பிழைத்து தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.
#EverydayHero Braving a 10-meter-high jump from a bridge, this brave soul saved a drowning woman from the river in Hangzhou, Zhejiang province. pic.twitter.com/XsAHo1x24B
— China Daily (@ChinaDaily) June 14, 2023
உயிரை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை
பாலத்தின் உயரம் காரணமாக முதலில் பயந்ததாகவும், ஆனால் இறுதியில் தண்ணீரில் குதிக்க முடிவு செய்ததாகவும் பெங் கிங்லின் கூறினார்.
"இது மிகவும் உயரமாக இருந்தது, என் கால்கள் நடுங்கின. இருப்பினும், நான் குதிக்கவில்லை என்றால் , அவள் உயிர் பிழைத்திருக்க முடியாது. உயிரை விட விலைமதிப்பற்ற எதுவும் இல்லை, ”என்று அவர் சீனா புளூ நியூஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
hungarian.cri.cn
இதற்கிடையில், பெங் கிங்லின் தண்ணீரில் குதித்து பெண்ணை கைப்பற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, நெட்டிசன்கள் கிங்கிளினின் விரைவான சிந்தனை மற்றும் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர்.
35 லட்சம் பரிசு
அவரது துணிச்சலுக்காக ஹாங்சோ காவல்துறை அதிகாரிகள் அவருக்கு ''நல்ல சமாரியன்'' பட்டத்தையும் 30,000 யுவான் (இலங்கை பணமதிப்பில் ரூபா. 12.8 லட்சம்) ரொக்கப் பரிசையும் வழங்கினர்.
அவரது நிறுவனம் அவருக்கு 50,000 யுவான் (இலங்கை பணமதிப்பில் ரூபா. 21.4 லட்சம்) ரொக்கப் பரிசையும் இலவசமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பையும் வழங்கியது.
近日,浙江杭州一年轻小伙子送餐途中遇见落水女子,随即从超过10米高的桥上跳下,成功营救落水女子。
— 夏一旦(Xiayidan) (@danyi_X) June 14, 2023
(视频链接:https://t.co/tzxUoAOqK0)
嘉奖来了!外卖小哥彭清林被授予杭州市见义勇为积极分子,奖金3万元!祝福早日康复。 pic.twitter.com/r7P1AkHq30
இதற்கிடையில், அவர் காப்பாற்றிய பெண் நல்ல நிலையில் இருக்கிறார், அவருக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |