கால்பந்து வீரரை கொன்று உடலை தூக்கி கொண்டு சுற்றிய முதலை: பின்னர் உள்ளூர்வாசிகள் எடுத்த முடிவு
கோஸ்ட்டா ரிக்காவில் இளம் கால்பந்து வீரரை கொன்று அவரது உடலை முதலை ஒன்று தண்ணீரில் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து வீரரின் உடலை இழுத்து சென்ற முதலை
கோஸ்ட்டா ரிக்காவின் குவானாகாஸ்ட் மாகாணத்தில் உள்ள ரியோ கானாஸ் ஆற்றங்கரையில் இளம் கால்பந்து வீரர் ஒருவரை முதலை ஒன்று கொன்று அவரது உடலை வாயில் கவ்வியபடி நீந்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 29ம் திகதி நடந்த இந்த சம்பவத்தின் போது உள்ளூர் மக்கள் இணைந்து முதலையை சுட்டுக் கொன்று 29 வயதுடைய இளம் வீரரின் உடலை மீட்டுள்ளனர்.
சுச்சோ என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் ஜீசஸ் ஆல்பர்டோ லோபஸ் ஓர்டிஸ், டிபோர்டிவோ ரியோ கானாஸ் என்ற கால்பந்து அணியின் வீரர் ஆவார்.
Jam Press
இவருக்கு 8 வயது மற்றும் 3 வயது கொண்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கால்பந்து வீரரின் இறுதிச் சடங்கு அவரது குடும்பம் நிதி திரட்டி வருகிறது.
இதற்கிடையில் சுச்சோவின் கால்பந்து அணி ஆகஸ்ட் 2ம் திகதி அவருக்கான இதயப்பூர்வமான அர்ப்பணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தடை விதித்துள்ள அமைச்சகம்
கோஸ்ட்டா ரிக்காவின் சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் அமைச்சகம் முதலை போன்ற பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கொல்வதையோ அல்லது வேட்டையாடுவதையோ தடை செய்துள்ளது.
WaterFrame/Alamy
ஆனால் உள்ளூர்வாசிகள் உடலை சேகரிக்கும் முயற்சியில் முதலையை கொல்லும் முடிவை எடுத்ததை அரசு எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பது தெளிவாக தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |