பிரான்ஸில் பற்றி எரிந்த வன்முறைக்கு நடுவே சாண்ட்விச்சை ருசித்து சாப்பிட்ட நபர் - வைரலாகும் வீடியோ!
பிரான்ஸில் பற்றி எரிந்த வன்முறைக்கு நடுவே ஒரு இளைஞர் சாண்ட்விச்சை ருசித்து சாப்பிட்ட வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரான்ஸில் பயங்கர கலவரம்
சமீபத்தில் பிரான்ஸ், பாரீஸ் நகர் அருகே நான்டர் என்ற இடத்தில் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது கொண்ட நேல் என்ற சிறுவனை போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசார் சுட்டு கொலை செய்யப்பட்டான்.
இச்சம்பவம் பெரும் வன்முறையாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக நாட்டின் பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தினபோது பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
பொது மக்களுக்கும், பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல் உருவானது. இந்த வன்முறை சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட பொலிசார் காயம் அடைந்துள்ளனர். 600க்கும் மேற்பட்ட மக்கள் கைதாகியுள்ளனர். முக்கியமான இடங்களில் பொலிசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாண்ட்விச்சை ருசித்து சாப்பிட்ட நபர்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரமான மோதல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர்.
@spectatorindex
அந்த நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனியாக ஒரு இளைஞர் அமர்ந்து அமைதியாக சாண்ட்விச்சை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதை அங்கிருந்தவர்கள் யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் எனக்கு சோறு தான் முக்கியம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Man continues to eat his sandwich as rioters and police clash in Nanterre, France. pic.twitter.com/UAby6X5ODX
— The Spectator Index (@spectatorindex) June 29, 2023