தாய்ப்பால் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தும் பிரபல நிறுவனம் - ஆனால் ஒரு நிபந்தனை
ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, சாக்லேட் என்ற பல்வேறு சுவைகளில் ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தாய்ப்பால் ஐஸ்கிரீம்
தற்போது, அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனமான Frida, தாய்ப்பால் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
உண்மையான தாய்ப்பாலை பயன்படுத்த அமெரிக்க உணவு ஒழுங்குமுறை அதிகாரிகள் அனுமதி அளிக்காத நிலையில், இந்த ஐஸ்கிரீம் உண்மையான தாய்ப்பாலில் இருந்து தயாரிக்கப்பட வில்லை.
இருப்பினும், தாய்ப்பால் மூலம் கிடைக்கும் பயன்களுக்கு நெருக்கமான ஐஸ்கிரீமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த ஐஸ்கிரீமில் இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் ஒமேகா-3, கார்போஹைட்ரேட். கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஐஸ்கிரீமை பெற, அறிவிப்பு தேதியில் இருந்து 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |