இஸ்ரேலின் அடாவடித்தனம்... கொந்தளித்த கத்தார் விசாரணைக்கு கோரிக்கை
பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல் தொடர்பில் அவசர விசாரணை தேவை என கத்தார் கோரிக்கை வைத்துள்ளது.
பாடசாலை மீது தாக்குதல்
காஸாவில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில் கத்தார் நாடு மத்தியஸ்தராக உள்ளது. இந்த நிலையிலேயே இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பாடசாலை மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல் குறித்து கத்தார் விசாரணை கோரியுள்ளது.
இடம்பெயர்ந்தவர்களுக்கான பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் கத்தார் முன்வைத்துள்ள கோரிக்கை வலுவானதாக உள்ளது என்றே பல தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, சுதந்திரமான ஐ.நா விசாரணை அதிகாரிகளை அனுப்புவது உட்பட முக்கியமான கோரிக்கைகளை கத்தார் முன்வைத்துள்ளது. கிழக்கு காஸாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதளை முன்னெடுத்தது.
பாடசாலையில் ஏராளமான மக்கள்
இதில் 100 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மட்டுமின்றி 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய பாடசாலையில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை தெரிந்து, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையிலேயே தற்போது கத்தாரும் அவசர விசாரணைக்கு கோரியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |