காஸா போர் நீடிக்கும் என்றால்... அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த நாடு
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால், அமெரிக்கா பற்றவைத்துள்ள இந்த நெருப்பில் இருந்து அந்த நாடு தப்ப முடியாது என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் Hossein Amirabdollahian பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
இனப்படுகொலை தொடர்ந்தால்
வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் Hossein Amirabdollahian, தற்போது பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிர்வகித்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்,
@getty
எங்கள் பிராந்தியத்தில் போர் விரிவடைவதை நாங்கள் ஒருபோதும் வரவேற்பதாக இல்லை. ஆனால் காஸாவில் இனப்படுகொலை தொடர்ந்தால், அவர்களே பற்றவைத்துள்ள இந்த தீயில் இருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி என்றார்.
மேலும், பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் Amirabdollahian, ஆனால் இஸ்ரேல் சிறையில் வாடும் 6,000 பாலஸ்தீனியர்களை விடுவிக்க உலக நாடுகள் அழுத்தம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், கத்தார் மற்றும் துருக்கியுடன் இணைந்து இந்த மிக முக்கியமான மனிதாபிமான முயற்சியில் ஈரான் தனது பங்கை ஆற்ற தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு பதிலடி
மட்டுமின்றி, இயற்கையாகவே, 6,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது உலக சமூகத்தின் மற்றொரு தேவை மற்றும் பொறுப்பு எனவும் அமைச்சர் Amirabdollahian சுட்டிகாட்டியுள்ளார்.
@getty
முன்னதாக அக்டோபர் 7 தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவை ஆளும் ஹமாஸை அழிக்க இஸ்ரேல் சபதம் செய்துள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான பொதுமக்களையும் ஹமாஸ் கடத்திச் சென்றுள்ளது.
@getty
இதனையடுத்து இஸ்ரேல் காஸா மீது வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வருவதுடன், முற்றுகையை அறிவித்துள்ளது, அத்துடன் தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருகிறது.
இதில் பாலஸ்தீன மக்களின் இழப்பு எண்ணிக்கை 7,000 கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
@getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |