தங்கக்கட்டிகள் முதல் தலைமுடி விக்குகள் வரை: வாக்னர் தலைவர் பங்களாவில் கைப்பற்றப்பட்ட விசித்திரமான பொருட்கள்
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-கில் உள்ள வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பங்களாவில் இருந்து தங்க கட்டிகள், துப்பாக்கிகள், தலைமுடி விக்குகள் போன்றவற்றை ரஷ்ய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
வாக்னர் கூலிப்படை களைப்பு
உக்ரைனில், ரஷ்ய படைகள் வாக்னர் கூலிப்படை வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி வந்த நிலையில், சமீபத்தில் வாக்னர் படை குழுவினர் ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் ரஷ்யாவின் எதிர்ப்பை தொடர்ந்து வாக்னர் படைக்குழு இந்த கிளர்ச்சியை பாதியில் நிறுத்திக் கொண்டது, அத்துடன் அதன் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியது.
அதே சமயம் அரசால் நிதி வழங்கப்பட்ட வந்த வாக்னர் கூலிப்படையை களைப்பதாக மாஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
வாக்னர் தலைவர் வீட்டில் சோதனை
இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-கில் உள்ள வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பங்களாவில் ரஷ்ய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து தலைமுடி விக்குகள் போன்ற விசித்திரமான பொருட்களை ரஷ்ய அதிகாரிகள் கைப்பற்றினர். அத்துடன் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், தங்கக் கட்டிகள், ஸ்டஃப்டு அலிகேட்டர் போன்றவையும் கைப்பற்றப்பட்டன.
Prigozhin's St Petersburg home has been raided by Russian security services.
— Sviat Hnizdovskyi (@s_hnizdovskyi) July 6, 2023
They found wigs a sledgehammer, weapons, and gold bars, the value of which has not been calculated.
Images and video were released by pro-Kremlin newspaper Izvestia. pic.twitter.com/ANRcuZrRU6
மேலும் அவருடைய சொத்தில் இருந்து சுமார் 600 மில்லியன் ருபிள் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் வாக்னர் தலைவர்
வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-கில் இருக்கலாம் அல்லது மாஸ்கோவில் இருக்கலாம் என பெலாரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
Belarusian President Alexander Lukashenko said Russia's Wagner group chief Yevgeny Prigozhin was still in Russia with thousands of fighters https://t.co/qgV0a9Me0u pic.twitter.com/kN3ktxBchs
— Reuters (@Reuters) July 6, 2023
சொகுசு பங்களா
சோதனையின் போது எவ்ஜெனி பிரிகோஜின் வீட்டில் இருந்து பல்வேறு கடவுச்சீட்டுகளை ரஷ்ய அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
எவ்ஜெனி பிரிகோஜின் சொகுசு பங்களாவில் அவருக்கென தனிப்பட்ட ஹெலிகாப்டர், ஸ்பா, நீச்சல் குளம், தனி பூஜை அறை, மற்றும் முழுமையான மருத்துவ சிகிச்சை அறை போன்றவற்றை கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |