வெளிநாட்டில் நடந்த கொண்டாட்டம் ஒன்றில் 150 பேர் மரணம்! சமீபத்தில் திருமணமான இலங்கை இளைஞரும் பலி
தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி பலர் பலி.
இலங்கை இளைஞர் ஒருவரும் மரணம் என தகவல்.
தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 150 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் ஒருவர் இலங்கையர் என தெரியவந்துள்ளது.
தலைநகர் சியோலிலுள்ள ஒரு முக்கியமான சந்தை ஒன்றில், ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காகத் திரளான மக்கள் கூடியிருந்தனர். நேற்று இரவு சுமார் 1 லட்சம் மக்கள் மத்திய மாவட்டமான இட்டாவோனில் பண்டிகைக்காகக் கூடினர்.
கொண்டாடத்தில் ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாகப் பலர் மயங்கியுள்ளனர். அதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு இரவு 10:30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.
இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர்.
எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்கம் என தெரியவந்துள்ளது. இந்த தகவலை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கண்டி பகுதியை சேர்ந்த முஹமட் ஜினாத் (27) என்ற இளைஞரே கூட்டநெரிசலில் சிக்கி இறந்துள்ளார். முஹமட் ஜினாத்துக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.