டெல் அவிவ் நகரை குறிவைத்து ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்: இஸ்ரேலிய மீடியா வெளியிட்ட வீடியோ
இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ராக்கெட் தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே 21 நாளாக கடுமையான சண்டை நீடித்து வருகிறது.
இந்த போர் நடவடிக்கையில் மொத்தமாக இதுவரை 8,540 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரு தரப்புகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் பரவி வருகிறது.
Hamas' military wing said they began shelling Tel Aviv
— NEXTA (@nexta_tv) October 27, 2023
Israeli media publishes a video of the work of the Israeli "Iron Dome" air defense system. pic.twitter.com/9WLbMYxgcc
இந்நிலையில் இஸ்ரேலிய நகரான டெல் அவிவ் மீது ஏவுகணை தாக்குதலை நாங்கள் தொடங்கி இருப்பதாக ஹமாஸின் ராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ
ஹமாஸ் படையினரின் இந்த ராக்கெட் தாக்குதலை அடுத்து, இஸ்ரேலிய ஊடகங்கள் 3 முக்கிய வீடியோக்களை பகிர்ந்துள்ளது.
AFP
அதில் இஸ்ரேலின் “Iron Dome”(இஸ்ரேலின் சிறப்பு வான் பாதுகாப்பு அமைப்பு) ஹமாஸ் படைகளின் ராக்கெட்டுகளுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |