கைகள் நடுங்க... சியோல் நகர தீயணைப்புத் தலைவர் கூறிய அந்த விடயம்: கண்ணீரில் மக்கள்
ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 153 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல்
விபத்தில் சிக்கி மரணமடைந்த பெரும்பாலான மக்கள் இளையோர்கள் எனவும் 20 வயது கடந்தவர்கள்
தென் கொரியாவின் சியோல் நகரில் முன்னெடுக்கப்பட்ட ஹாலோவீன் கொண்டாட்டம் பெரும் துயரத்தில் முடிந்த நிலையில், தீயணைப்புத் தலைவர் கூறிய வார்த்தைகள் மொத்த மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
சியோல் நகரில் முன்னெடுக்கப்பட்ட ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 153 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டசின் கணக்கான மக்கள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
@reuters
தென் கொரிய நாட்டை உலுக்கிய மிக மோசமான துயரச் சம்பவங்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் ஊடகவியலாளர்களை எதிர்கொண்ட நகர தீயணைப்புத் துறைத் தலைவர் Choi Seong-beom,
கைகள் நடுங்க அந்த தகவலை உறுதி செய்துள்ளார். ஹாலோவீன் விபத்தில் சிக்கி மரணமடைந்த பெரும்பாலான மக்கள் இளையோர்கள் எனவும் 20 வயது கடந்தவர்கள் எனவும் கண்கள் கலங்க Choi Seong-beom வெளிப்படுத்தியுள்ளார்.
@getty
மேலும், பல சமூக ஊடக பயனர்கள் குறித்த சம்பவத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டு, சம்பவத்தின் போது துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதனிடையே, ஞாயிறன்று தேசிய துக்க தினமாக அனுசரிக்க ஜனாதிபதி Yoon Suk-yeol வலியுறுத்தினார். மேலும், நேற்றிரவு சியோலின் மையப்பகுதியில் நடந்திருக்கக்கூடாத ஒரு துயரமும் பேரழிவும் நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
@reuters
பிரித்தானியா சார்பில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி தங்கள் அன்பு மற்றும் பிரார்த்தனைகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில், கேள்விப்பட்ட தகவல் பயங்கரமானது என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மரணமடைந்தவர்களில் குறைந்தது 90% பேர்களை மதியத்திற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளனதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையர் உட்பட 19 வெளிநாட்டவர்களும் மரணமடைந்தவர்களில் உட்படுவார்கள் என Choi Seong-beom தெரிவித்துள்ளார்.
@getty