பனிப்பிரதேசமாக மாறிய சவுதி அரேபியா பாலைவனம்: வைரலாகும் காட்சிகள்
சவுதி அரேபியா என்றாலே, நம் கண்ணுக்கு முன் வருவது பாலைவனமும் அங்கு காயும்கொளுத்தும் வெயிலும்தான்.
ஆனால், அந்த தோற்றத்தையே மாற்றும் வகையிலான ஒரு காட்சி தற்போது அங்கு காணப்படுகிறது.

ஆம், சவுதி அரேபியாவின் மலைகளில் ஒன்றில் பனி பெய்து, அது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றைப் போல காட்சியளிக்கிறது.
பனிப்பிரதேசமாக மாறிய பாலைவனம்
சவுதி அரேபியாவின் Tabuk பகுதியில் அமைந்துள்ள Jabal al-Lawz என்னும் மலையில் பனி பொழிந்து அங்கு வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே சென்றுள்ளது.
அது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்வையிட்டுள்ள இணையவாசிகள், இது உண்மையா அல்லது AIயால் உருவாக்கப்பட்ட காட்சியா என வியக்கிறார்கள்.
Videos show deserts and mountains blanketed with snow in Saudi Arabia’s Hail and Tabuk region, as a cold weather snap hits several cities. pic.twitter.com/RE2ZFPguPO
— Al Jazeera English (@AJEnglish) December 19, 2025
சமூக ஊடகம் ஒன்றில் வெளியான வீடியோ ஒன்றை பார்வையிட்டுள்ள ஒருவர், அதை முகம்மது நபியின் தீர்க்கதரிசனத்துடன் இணைத்து, இது உலகத்தின் முடிவு நெருங்குவதன் அடையாளமாக இருக்கலாமோ என கேள்வி எழுப்பியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |