இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக 300 ஏவுகணைகளை வீசிய ஹிஸ்புல்லா: கடும் நெருக்கடியில் மத்திய கிழக்கு
தங்களின் மூத்த தளபதி ஒருவரை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி தாக்கியுள்ளது ஹிஸ்புல்லா.
ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை
லெபபானின் ஹிஸ்புல்லா படைகளால் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த இஸ்ரேல் முன்கூட்டியே தடுப்பு தாக்குதலை தொடங்கியது.
ஆனால் பதிலடியாக ஹிஸ்புல்லா ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீச திட்டமிட்டதாகவும், தங்களின் துரித நடவடிக்கைகளால் 320 ஏவுகணைகள் மட்டுமே அவர்களால் வீச முடிந்தது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் இலக்கு வடக்கு மற்றும் மத்திய டெல் அவிவ் நகரம் என்பதையும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஹிஸ்புல்லா மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்த நிலையில், உள்ளூர் நேரப்படி விடிகாலை 4.30 மணியளவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் Daniel Hagari தெரிவிக்கையில், 100 போர் விமானங்கள் ஒரே நேரத்தில் தெற்கு லெபனானின் 40 பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை முன்னெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
போருக்கு தூண்டும் ஒரு செயலாகவே
கடந்த 10 மாதங்களாக இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. ஆனால் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து, ஹிஸ்புல்லா முன்னெடுக்கும் மிகப்பெரிய தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது.
இது அமெரிக்காவையும் ஈரானையும் எஞ்சிய பயங்கரவாத குழுக்களையும் போருக்கு தூண்டும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஈரானின் மிகப்பெரிய மறைமுக இராணுவமாக அடையாளப்படுத்தப்படும் ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் 11 ராணுவ முகாம்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் நிர்வாகம் 48 மணி நேர அவச நிலையை நாடு முழுவதும் பிரகடனம் செய்துள்ளது. இதனிடையே, பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும், இது நீடிக்கும் என்றும் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |