50 வயதை தாண்டினாலும் இளமையாக தெரியனுமா? அப்போ இந்த ஒரு பொருள் போதுமானது
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
எவ்வளவு தான் வயதாகினாலும் அது சருமத்தில் காட்டக்கூடாது என 50 வயதை தாண்டிய பெண்கள் யோசிப்பார்கள்.
அதற்காக விதவிதமான அழகு சாதன பொருள்களை வாங்கி பயன்படுத்தும் வழக்கம் என்றே கூறலாம். இனி அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம்.
சருமத்தை எப்போதும் இளமையான தோற்றத்துடன் வைத்திருக்க ஆயுர்வேதத்தில் சில மூலிகைகள் உள்ளன.
அது வைத்து எப்படி சருமத்தை இளமையான தோற்றத்துடன் வைத்திருக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
துளசி
பல மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான துளசி பார்க்கப்படுகிறது. குறிப்பாக இரு சரும ஆரோக்கியத்திற்கு பெரிய பங்காற்றுகிறது.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் வயதான தோற்றத்தை தடுத்து என்றும் இளமையுடன் இருக்க உதவி புரிகிறது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை ஒர் வாசணை பொருளாக பார்க்கப்படுகிறது. இது ரத்த சர்க்கரையை குறைப்பது முதல் உடலில் இருக்கும் கொழுப்பை குறைப்பது வரையில் உதவுகிறது.
இதில் இருக்கும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் சருமத்தில் ஏற்படும் கொலாஜன் சேதத்தைத் தடுத்து எப்போதும் இளமையான தொற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
இஞ்சி
இஞ்சி என்றாலே சமையலுக்கு என்று யோசிக்க வேண்டாம். அது இப்போது சரும நலனுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சியில் இருக்கும் வேதிப்பொருள்களும் ஊட்டச்சத்துக்களும் சருமம் மற்றும் முடிக்கு நன்மையை தருகிறது.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி வயதாகும் சருமத்தை புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
அஸ்வகந்தா
அஸ்வகந்தாவை இந்தியன் ஜின்ஜெங் என்று கூறுவது வழக்கம். இது ஆயுர்வேதத்தின் முக்கிய மூலிகையாகும்.
இதில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் பண்புகள் சருமத்தில் ஏற்படும் பருக்கள், தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்து இளமையான தோற்றத்தை என்றும் வைத்திருக்கும்.
ரோஸ்மேரி
ரோஸ்மேரி மூலிகையானது வாசணை பொருட்களுக்காக பயன்படுத்துவதாகும். அதுமட்டுமல்லாமல் இது சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சருமத்தில் புற ஊதா கதிர்கள் வருதை தடுத்து சருமத்தை பாதுகாக்கும். மற்றும் சருமத்தில் ஏற்படும் சருகத்தையும் குறைக்கிறது.
ஜின்ஜெங்
ஜின்ஜெங் என்ற மூலிகையானது சருமத்திற்கு தேவையான ஓட்சிசனை தருகிறது. ருமத்தின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் சருமம் எப்போதும் இளமையாகவும் பொலிவாகவும் இருக்கும்.
ஜின்க்கோ
ஜின்க்கோ என்ற செடியானது அழகிற்காக வீடுகளில் வளர்க்கபடுகிறது. இது நிறைய மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகையாகும். சருமத்தில் ஏற்படும் சருகத்தை போக்கி என்றும் இளமையாக வைத்திருக்கும்.
குதிரைவால் மூலிகை
இந்த மூலிகையானது பார்ப்பதற்கு குதிரைவால் போன்று இருக்கும். இதை உள்ளுக்குள்ளும் சாப்பிடுவதன் மூலமும் சருமத்துக்கு தடவுவதன் மூலம் எப்போதும் இளமையாக இருக்கலாம்.
நொச்சி
நொச்சி இவை என்ற மூலிகையில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இது சருமத்தில் ஏற்படும் வயதான தோற்றத்தை குறைக்கும்.
ஆர்கேனோ
அனைவரும் விரும்பி சாப்பிடும் பீட்சாவில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆர்கேனோவில் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஃபிளவனாய்டுகள் சருமத்தல் ஃப்ரீ - ரேடிக்கல்ஸ்களின் சேதத்தைக் குறைத்து என்றும் இளமையுடன் இருக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |