கின்னஸ் சாதனையாளர் திருடனானது எப்படி? அதிர்ச்சி பின்னணி
எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய கின்னஸ் சாதனையாளரான ரவி வறுமையில் வாடி தற்போது வறுமை அவரை திருடனாக மாற்றியுள்ளது.
திருடிய கின்னஸ் சாதனையாளர்
கர்நாடகா, பெங்களூரில் வி.வி.புரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அங்கு, வெள்ளி சிலைகள் காணாமல் போனது. இதனையடுத்து, பொருள்கள் காணாமல் போனதாக கோயில் நிர்வாகம் தரப்பில் வி.வி.புரம் பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.
பின்னர், பொலிசார் புகார் வந்ததையடுத்து திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அங்கு சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, சிசிடிவி அடிப்படையில் பொலிசார் ஒரு நபரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது தான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்தது.
யார் அந்த கின்னஸ் சாதனையாளர்
திருட்டு புகாரில் பொலிசார் கைது செய்த நபர் கின்னஸ் சாதனையாளர் ரவி. இவர், எய்ட்ஸ் நோய்க்கு எதிராக மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். 2000 முதல் 2006 ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 33 மாநிலங்களில் சைக்கிளில் சென்றார்.
6 ஆண்டுகளில் விழிப்புணர்வு செய்ய சைக்கிளில் பயணம் மேற்கொண்டதால் இவர் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார்.
Mint
அதுமட்டுமல்லாமல் இவருக்கு எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மாகாராஷ்டிரா அரசு மோட்டார் சைக்கிளை வழங்கி கௌரவப்படுத்தியது.
பொலிசார் விசாரணை
கின்னஸ் சாதனையாளர் ரவி சமீப காலமாக வேலை ஏதும் இல்லாமல் வறுமையில் வாடி வந்துள்ளார். அதனால், வி.வி.புரம் பகுதியில் உள்ள கோயில் வெள்ளி சிலைகளை திருடி உள்ளார்.
இவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கோயில் சிலைகளையும் இவரிடம் இருந்து மீட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |